உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில், காவலர் ஒருவர் மதுக்கடைக்குள் போதையில் நிலைதடுமாறி நாற்காலியில் தலைகீழாகக் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. காக்கிச் சீருடையின் மரியாதையைக் குலைக்கும் வகையில் மது அருந்திவிட்டு பொதுமடடத்தில் அவர் அராஜகமாகப் படுத்துக் கிடக்கும் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“டூட்டி செய்து மிகவும் களைத்துவிட்டதால் தீவான்ஜி யோகா செய்கிறார்” என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வரும் நிலையில், காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
