“பக்கத்திலேயே போலீஸ்… ஆனா ஒன்னும் பண்ணல…” இளம்பெண்ணை அடித்து முடியை பிடித்து இழுத்த கும்பல்…. நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஆடி 12, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற ஷிவாங்கி சுக்லா என்ற பெண், சாலை விபத்து தகராறில் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இவருடைய காரும் ஒரு மோட்டார் சைக்கிளும் லேசாக மோதிக்கொண்டதே இந்த மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணைக் கன்னத்தில் அறைந்தும், முடியைப் பிடித்து இழுத்தும் துன்புறுத்திய அந்த வன்முறைக் கும்பல், அவருடைய வாகனத்தையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் அங்கிருந்த காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்தபோதிலும், அவர்கள் எவ்விதத் தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்ணும் நேரில் பார்த்தவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முக்கியக் குற்றவாளி ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார், இந்த வன்முறை குறித்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.