கடலூர் மாவட்டத்தில் வேகமாக வந்த பேருந்து, பைக் ஓட்டுநர் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் இருசக்கர வாகன ஓட்டுனர் யு டர்ன் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்து கொண்டிருந்த பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது.
பேருந்து ஓட்டுனர் திடீரென்று பிரேக் அடித்ததும் வாகனத்தின் வேக கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தை தவிர்க்க முடியவில்லை. பேருந்து பைக்கை மோதிய பிறகு அருகில் நின்று கொண்டிருந்த பாதசாரி மீது மோதியதில் அவரும் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். பிறகு அந்த பேருந்து அருகில் இருந்த வீட்டு சுவரில் மோதியுள்ளது. விபத்து நடந்த உடனே பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற வைத்துள்ளது.
A speeding bus hits a careless biker trying to make a U turn and pedestrian too. @DriveSmart_IN @3rdEyeDude @ChristinMP_ @dabir @motordave2 @IamAnujKulkarni pic.twitter.com/yDA33naWMH
— Amit Kulkarni (@ashkarna) August 30, 2025
