Connect with us

ஒருவழியா ஆரம்பிச்சுட்டாங்கடா…! விடாமுயற்சி ஷூட்டிங்  ஆரம்பம்…! எப்போ எங்க தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

CINEMA

ஒருவழியா ஆரம்பிச்சுட்டாங்கடா…! விடாமுயற்சி ஷூட்டிங்  ஆரம்பம்…! எப்போ எங்க தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

 

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 4 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் தொடங்கப்படும் என்றும், 40 நாட்கள் முதற்கட்டமாக நடைபெறும் இந்த ஷூட்டிங்கில் அஜித், திரிஷா , ஆரவ், ஹுமா குரேஷி போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை கேள்விப்பட்ட தல ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

Continue Reading
To Top