நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இரண்டு நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.
ஏகப்பட்ட கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் பண்டிகையாக விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடினர். அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடம் இருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற கதைக்களத்தை கொண்ட விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் விடாமுயற்சி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 22 கோடியும் இந்தியாவில் மொத்தமாக 26 கோடியும் வசூல் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் முடிவில் விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் 8.4 கோடியும் இந்திய அளவில் 8.75 கோடியும் வசூல் செய்துள்ள நிலையில் மூன்றாவது நாளான இன்று இந்திய அளவில் 40லிருந்து 42 கோடி ரூபாய் வரைதான் வசூலித்திருக்கும் என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…
எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…
தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…
"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…