நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது. அதிகாலையிலையே பல்வேறு மாநிலங்களில் விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில் படத்தின் முதல் பாதி விமர்சனங்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றன.
படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் என அனைத்திலும் ஒரு பக்காவான ஹாலிவுட் தரத்தை மகிழ் திருமேனி கொடுத்திருந்த நிலையில் படம் ஃபயராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். மகிழ்்திருமேனி தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக்கூடிய அட்டகாசமான ஆக்சன் படத்தை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் தற்போது திரையரங்கே தெறிக்குது என்றும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜுனையே அஜித் ஓவர் டேக் செய்து விட்டார் என்றும் தெரிவித்து வருகிறார்கள். அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு ஒரு வார்த்தையில் விமர்சனம் சொல்ல வேண்டுமென்றால் வெறித்தனம் என நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ஏராளமான அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் முதல் பாதி தரமான சம்பவம் என்றும் இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படம் இதுதான் என்றும் பதிவுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.
முதல் பாதை முழுவதுமே யாரு அந்த பிரகாஷ் என்ற கேள்வி சஸ்பென்ஸ் ஆக உள்ளது. இரண்டாம் பாதி இன்னும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பத்தில் கதைக்குள் செல்ல நேரமெடுத்தாலும் கதைக்குள் வந்ததும் ஏராளமான டெஸ்ட்களை வைத்து ரசிகர்களை மிரள வைக்கிறது. மகிழ் திருமேனி எந்த ஒரு கமர்சியல் விஷயத்தையும் தேவையில்லாமல் சேர்க்கவே இல்லை எனவும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
விடாமுயற்சி , ஒரு சாதாரணமான ஆக்ஷன் த்ரில்லர். சுவாரஸ்யமான கதைக்களத்தையும், சில நேர்த்தியான திருப்பங்களையும் கொண்டுள்ளது. ஆனால் மிகவும் மெதுவாக இருப்பதால், சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அடிப்படை கதைக்களம் சில திருப்பங்களுடன் வருகிறது. மேலும் இயக்குநர் கதையை நேர்த்தியாக சொல்லியிருந்தார், தேவையற்ற வணிக கூறுகளை தவிர்த்திருந்தார். இருப்பினும், அதை ஒரு வேகமான முறையில் விவரிக்கத் தவறிவிட்டார் என தெரிவிக்கின்றனர்.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…