ரசிகர்களின் 2 வருட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா அஜித்தின் விடாமுயற்சி.. வெளியானது X தள விமர்சனம்..!

By Nanthini on மாசி 6, 2025

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

விடாமுயற்சி' சிறப்புக் காட்சிகளுக்கு ஒருநாள் மட்டும் அரசு அனுமதி! | TN govt  allows special screening of Ajith Vidamuyarchi for one day only -  hindutamil.in

   

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது. அதிகாலையிலையே பல்வேறு மாநிலங்களில் விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில் படத்தின் முதல் பாதி விமர்சனங்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றன.

   

இந்த வருடம் ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய 'விடாமுயற்சி'.. வருஷ  கடைசியிலுமா? | vidamuyarchi movie has lots of issues

 

படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் என அனைத்திலும் ஒரு பக்காவான ஹாலிவுட் தரத்தை மகிழ் திருமேனி கொடுத்திருந்த நிலையில் படம் ஃபயராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். மகிழ்்திருமேனி தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக்கூடிய அட்டகாசமான ஆக்சன் படத்தை கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அக்டோபர் 31ல் 'விடாமுயற்சி' பட 'டீசர்' வெளியீடு, திரைச்செய்தி செய்திகள் -  தமிழ் முரசு Cinema News in Tamil, Tamil Murasu

 

படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் தற்போது திரையரங்கே தெறிக்குது என்றும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜுனையே அஜித் ஓவர் டேக் செய்து விட்டார் என்றும் தெரிவித்து வருகிறார்கள். அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு ஒரு வார்த்தையில் விமர்சனம் சொல்ல வேண்டுமென்றால் வெறித்தனம் என நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். ஏராளமான அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் முதல் பாதி தரமான சம்பவம் என்றும் இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படம் இதுதான் என்றும் பதிவுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.

முதல் பாதை முழுவதுமே யாரு அந்த பிரகாஷ் என்ற கேள்வி சஸ்பென்ஸ் ஆக உள்ளது. இரண்டாம் பாதி இன்னும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். விடாமுயற்சி திரைப்படம் ஆரம்பத்தில் கதைக்குள் செல்ல நேரமெடுத்தாலும் கதைக்குள் வந்ததும் ஏராளமான டெஸ்ட்களை வைத்து ரசிகர்களை மிரள வைக்கிறது. மகிழ் திருமேனி எந்த ஒரு கமர்சியல் விஷயத்தையும் தேவையில்லாமல் சேர்க்கவே இல்லை எனவும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

vidamuyarchi vidamuyarchi review ajith kumar

விடாமுயற்சி , ஒரு சாதாரணமான ஆக்‌ஷன் த்ரில்லர். சுவாரஸ்யமான கதைக்களத்தையும், சில நேர்த்தியான திருப்பங்களையும் கொண்டுள்ளது. ஆனால் மிகவும் மெதுவாக இருப்பதால், சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. அடிப்படை கதைக்களம் சில திருப்பங்களுடன் வருகிறது. மேலும் இயக்குநர் கதையை நேர்த்தியாக சொல்லியிருந்தார், தேவையற்ற வணிக கூறுகளை தவிர்த்திருந்தார். இருப்பினும், அதை ஒரு வேகமான முறையில் விவரிக்கத் தவறிவிட்டார் என தெரிவிக்கின்றனர்.