Connect with us

விடாமுயற்சி கிடப்பில் கிடப்பதற்கு அஜித் தான் காரணமா.? என்னப்பா சொல்றீங்க.. வெளியான ஷாக்கிங் தகவல்..

CINEMA

விடாமுயற்சி கிடப்பில் கிடப்பதற்கு அஜித் தான் காரணமா.? என்னப்பா சொல்றீங்க.. வெளியான ஷாக்கிங் தகவல்..

அஜித் மறு பெயர் தாமதம் என்று கூறும்படி ஆகிவிட்டது. அஜித்தின் படப்பிடிப்பு தொடங்கினால் போதும் ஒரு அப்டேட் வருவதற்கு ஆறு மாத காலமாகும், அடுத்த அப்டேட் ஒரு வருடம் கழித்து தான் வரும். அஜித்தின் படத்தை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுப்பார்கள். விவேகம், வலிமை, துணிவு இது போன்ற பல படங்கள் ரசிகர்கள் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் பின்னாடியும் இயக்குனர் பின்னாடியும் பலமுறை சுற்றி திரிந்து உள்ளார்கள். இருப்பினும் எந்த ஒரு அப்டேட்டும் வராது.


தற்போது துணிவு படத்திற்கு பின் அஜித் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்தார். “மகிழ் திருமேனி” அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் திரிஷா அவர்கள் நடிப்புல் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் “விடாமுயற்சி”. இப்படம் கடந்த ஆண்டு பொங்கல் பொழுதில் வெளியான துணிவு படத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்டு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது,


அதை பின்னதாக அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் டைட்டில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் பின் படப்பிடிப்பு நீண்ட நாள் நிறுத்தி வைக்கப்பட்டது, மீண்டும் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தது மறுபடியும் சில பல காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது, இப்படியே மாறி மாறி சென்றது. தற்போது லைக்கா நிறுவனத்தில் பண பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் விடாமுயற்சி படத்தை கிடப்பிலே போட்டு விட்டார்கள். ஆனால் அஜித்தின் 53வது படத்தின் அப்டேட்டை தற்போது விறுவிறுப்பாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

   

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாக உள்ள படம் தான் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னாள் இவரின் படமான AAA, த்ரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படம் போல் அமையாமல் கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த மார்க்கண்டினி படம் போல் இப்படத்தை மிக விறுவிறுப்பாக எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விடாமுயற்சி கிடப்பில் கிடப்பதற்கு அஜித் தான் காரணம் என்று பல சர்ச்சைகள் கிளப்பி இருந்தார்கள்.

 

ஆனால் உண்மையில் தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தை சரியாக எடுத்துச் செல்லாமல் இருக்கிறார்கள் என்றும், அதனால் தான் படம் பல வருடமாக கிடப்பிலே போடப்பட்டுள்ளது என்று தகவல் கசிந்துள்ளது. இதில் ஒரு பங்கு மகிழ்ந்திருமேனிக்கும் அடங்கும். அஜித் போன்ற மிக பிரபலமான ஒருவரை வைத்து படம் இயக்கும்போது கவனம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம், ஆனால் மகிழ்ச்சிறுமேனி படத்தை எவ்வளவு மெதுவாக எடுக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த வாய்ப்பை கைநழுவ விட மாட்டார் என்றும், அஜித்தின் 53வது படத்தை சரியாக பிக்கப் பண்ணி மிகச் சிறப்பாக படத்தை எடுத்து ரசிகர்களிடம் விருந்தாக கொடுப்பார் என்று பலரும் இவரை நேர்மறையான விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் குட் பேட் அக்லி என்ற டைட்டில் தான் சரியில்லை என்றும் அஜித்தின் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் ஆதிக்கவிச்சந்திரன் இயக்கம் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top