வெற்றியை தரும் வெட்டிவேர்… வீட்டில் பணம் தங்க எளிய வெட்டிவேர் பரிகாரம்…

Spread the love

இந்து மத வழிபாடுகளில் பல விஷயங்களுக்கு பரிகாரம் என்பது இருக்கும். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் கிரகங்களின் தன்மை குறைந்து கெட்டவைகள் நடப்பதை தடுக்கிறது. அது மட்டுமில்லாமல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் தொழில் வெற்றிக்கும் பரிகாரங்கள் செய்யப்படுகிறது. அது போல் ஒரு பரிகாரம்தான் வெட்டிவேர் பரிகாரம். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் பணவரவை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி இனி காண்போம்.

வெற்றி தரக்கூடியது வெட்டிவேர் என்பது பொருள். வெட்டிவேரின் மருத்துவ பயன்கள் ஏராளமான இருக்கின்றது. ஆனால் ஆன்மிக ரீதியாகவும் வெட்டிவேர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பணத்தை ஈர்ப்பதற்கு ஒரு சில பொருட்கள் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. அதில் ஒன்றுதான் வெட்டிவேர். மருத்துவ குணமும், மகத்துவமும் நிறைந்த இந்த வெட்டிவேரை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வெட்டிவேரின் வாசம் உங்கள் வீடு முழுவதும் பரவும் போது அது நேர்மறை சக்திகளை அதிகரிக்க செய்யும்.

இந்த வெட்டிவேர் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக வாங்குவதற்கு கிடைக்கும். ஒரு சிறிய டப்பாவிலோ கிண்ணத்திலோ போட்டு ஆங்காங்கே வீட்டில் வெட்டிவேரை வையுங்கள். அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை துணியில் வெட்டிவேரை போட்டு முடிந்து வீட்டில் ஆங்காங்கே வைக்கும் போது அதன் லேசான வாசம் வீடு முழுவதும் பரவும். இந்த வாசனை பணவரவை ஈர்க்கக்கூடியது. இந்த வாசனையே சுவாசித்துக் கொண்டு இருந்தால் அது உங்கள் உடம்புக்கும் மிகவும் பயன்களை அளிக்கக் கூடியது.

இது மட்டுமல்லாமல் பூஜை அறையில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி அதில் வெட்டி வேரை போட்டு அதில் முழு எலுமிச்சையை போட்டு வைக்க வேண்டும். இதும் பண வரவை ஈர்க்கும். இதை அவ்வபோது வாரத்திற்கு ஒருமுறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை நம் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆங்காங்கே வைத்திருந்த வெட்டிவேரை அனைத்தையும் எடுத்து வீட்டின் வெளிப்பக்கமாக கற்பூரம் வைத்து எரித்து விட வேண்டும். பிறகு புதிய வெட்டிவேரை மாற்றி ஆங்காங்கே வைத்துக் கொள்ளலாம். இந்த பரிகாரங்களை நீங்கள் செய்யும் போது நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.

admin

Recent Posts

“அதிர்ந்த கோட்டை… தவெக ஆட்சியை கவிழ்க்க ரகசிய டீல்?”… உளவுத்துறை ரிப்போர்ட்டால் பதறிய முதல்வர் விஜய்…!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…

6 minutes ago

FLASH NEWS: விஜய் அரசுக்கு வந்த ஆபத்து.. ரூ.35 கோடி பேரம்…. மாட்டிக்கொண்ட செந்தில் பாலாஜி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…

14 minutes ago

அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் ஏன் அடுத்தடுத்து விலகுகிறார்கள்?… அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் வைத்த அதிரடி செக்…!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…

17 minutes ago

கிருஷ்ணகிரியில் அதிரவைக்கும் சம்பவம்… நீதிமன்றம் சென்ற நபர் காட்டில் சடலமாக மீட்பு…. 4 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் தகவல்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…

35 minutes ago

26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…

47 minutes ago

“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…

54 minutes ago