நான் மட்டும் நடிகனா இருந்தா அந்த படத்துல நடிக்காமல் பாதியிலே போய் இருப்பேன்.. பிரபல நடிகரை பாராட்டிய வெற்றிமாறன்..!!

By admin on புரட்டாதி 27, 2024

Spread the love

பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீசான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது.

#image_title

இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் சிறந்த திரைக்கதை ஆசிரியர் உள்ளிட்ட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தது. பின்னர் உதயம் nh4, நான் ராஜாவாகப் போகிறேன், பொறியாளன், காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை வெற்றிமாறன் தயாரித்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை திரைப்படம் ரிலீஸ் ஆனது.

   
   

 

இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நிஜ வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களை வைத்து எழுதிய ஒரு நாவலை வெற்றிமாறன் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி மாற்றிவிட்டார். பிழைப்புக்காக ஆந்திரா செல்லும் இளைஞர்களை போலீசார் பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தை அடிப்படையாக வைத்து அந்த படம் எடுக்கப்பட்டது.

ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் தினேஷ் மாதிரி ஒரு நடிகன் இல்லன்னா என்னால விசாரணை படத்தை எடுத்திருக்கவே முடியாது. அந்த படத்துக்கு தினேஷ் கொடுத்த அர்ப்பணிப்பு மிகப்பெரியது. என்னால நினைச்சு கூட அதை பார்க்க முடியல. நான் ஒரு நடிகனாக இருந்திருந்தால் படத்தின் பாதியிலேயே இனிமேல் என் வாழ்க்கையில் நடிக்க ஆசைப்படவே மாட்டேன் என சொல்லிட்டு போயிருப்பேன். அவ்வளவு கஷ்டமான படம் அது என வெற்றிமாறன் தினேஷை பாராட்டி பேசினார்.