Connect with us

“விஜய் முதல்ல இத பண்ணிட்டு, அப்புறம் தான் அரசியலுக்கு வரணும்”.. விஜய் அரசியல் குறித்து வெற்றிமாறன் அளித்த பேட்டி..!!

CINEMA

“விஜய் முதல்ல இத பண்ணிட்டு, அப்புறம் தான் அரசியலுக்கு வரணும்”.. விஜய் அரசியல் குறித்து வெற்றிமாறன் அளித்த பேட்டி..!!

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியல் தொடர்பான நிர்வாகிகள் கூட்டம், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியது, சங்கங்கள் உருவாக்கம், இலவச பாடசாலைகள் என அரசியலை நோக்கி விஜய் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

   

மேலும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் மேடைப்பேச்சுகளிலும் அதனை விஜய் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் துப்புரவு பணி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது சினிமா குறித்தும், விஜய் அரசியல் பேச்சு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன் அவங்க அரசியலுக்கு வருவதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள் என்று தான் நினைக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாரும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை இருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பு அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் அரசியலுக்கு வர வேண்டும். விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்த பிறகு அரசியலுக்கு வர வேண்டும். இதை பற்றி மேலும் நான் எதையும் கூற விரும்பவில்லை என கூறியுள்ளார்.

author avatar
Priya Ram
Continue Reading
To Top