#image_title
தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளைக் கொண்டவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கம் மட்டுமின்றி நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலும் கலக்கி வருகிறார். தற்பொழுது இயக்குனர் அமீர் ஹீரோவாக மாயவலை என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமீருடன் இணைந்து ஆர்யாவின் தம்பி சத்யாவும் மற்றொரு கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கிறார். இவர்களுடன் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும், JSM பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறார்.
இயக்குனர் ரமேஷ்கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் அமீரின் இந்த படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இயக்குனர் அமீர் -யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு இணைந்திருப்பதால் இத்திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள இப்படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் அமீர் தோன்றுகிறார். பின்னணி இசையும் இந்த டீசருக்கு பலம் சேர்த்துள்ளது. இதோ அந்த டீசர் வீடியோ…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…