#image_title
சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ. 1000 வீதம் ரூ. 2 லட்சம் பணத்தை கொடுத்து உதவினார் கலக்கப் போவது யாரு பாலா. இவர் விஜய் டிவியில் பிரபலமாக இருக்கிறார். சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ள வளரும் கலைஞராக இருக்கிறார். எனினும் மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். முதலில் 200 குடும்பங்களுக்கு தல ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவிய பாலா, இப்போது தனது சீட்டுப் பணம், அதாவது தனக்கான சேமிப்பு பணமாக இருந்த ரூ. 3 லட்சம் ரூபாயை, 140 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கியுள்ளார். மேலும் நைட்டீ, லுங்கி, பெட்ஷீட் மற்றும் உபகரணங்கள் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி உள்ளார்.
KBY Bala
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பாலா கூறுகையில், இது பப்ளிசிட்டிக்காக நான் பண்ணவில்லை. இப்படி உதவி பண்ணுவது வெளியே தெரியும் போது, மற்றவர்களுக்கு உதவி தேவைப்படுவதும் எனக்கு தெரிய வருகிறது. துரைப்பாக்கம் பக்கத்துல ஒரு வீட்டுல பாம்புகளா இருந்தது. யாருமே போக முடியலை. 2 பேர் தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு உதவினோம். நான் இப்படி தருவது எல்லாமே என் சொந்த பணம்தான். 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என ஆசைப்பட்டேன். முதலில் 2 லட்சம், இப்போது எனக்கான சேமிப்பாக வைத்திருந்த சீட்டுப்பணம் 3 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்துவிட்டேன்.
KBY Bala
என் அம்மாவிடம் நான் இப்படி செய்வது பற்றி கேட்ட போது, என் மகன் ஊதாரித்தனமாக செலவு செய்யவில்லை. கஷ்டப்படறவங்களுக்கு தானே கொடுத்து உதவறான் என்று சொல்லி விட்டனர். சென்னை தான் என்னை வாழ வைத்த ஊர். நான் சாப்பிடறது, இருக்கறது எல்லாமே சென்னை தான். அதனால என்னால முடிஞ்ச உதவிகளை நான் செய்யறேன். மத்தவங்களை பத்தி பேச எனக்கு தகுதி இல்லைன்னு நினைக்கிறேன்.கொஞ்ச நாள் வாழப் போறோம். இருக்கிற வரைக்கும் ஜாலியாக மத்தவங்களுக்கு உதவி செய்வோம். கடவுள் இருக்காரு, அவரு பார்த்துக்குவாரு, என்று கூறியிருக்கிறார் கேபிஒய் பாலா.
#image_title
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…