Categories: சினிமா

திரையுலகில் அடுத்தடுத்து நிகழும் சோகம்.. ‘முண்டாசுப்பட்டி’ பட நடிகர் திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Spread the love

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் மதுரை மோகன் இன்று மறைந்துள்ளார். அவரின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டு காலமாக பயணம் செய்தவர் மதுரை மோகன். இவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபல நடிகர்களின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்திருந்த முண்டாசுப்பட்டி படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது.

இதைத்தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதியின் வீரன், சமுத்திரக்கனியின் வினோதய சித்தம் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து அசத்தியவர்.  இன்று தன் சொந்த ஊரான மதுரையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமாருக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.  தற்பொழுது ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது இரங்கல்கள்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

25 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

28 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

37 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

38 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

53 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

59 minutes ago