Connect with us

‘வாழ்க்கை எப்போதுமே ஒரு மாயவலை தான்’… வெற்றிமாறன்- அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாயவலை’ படத்தின் மிரட்டும் டீசர் இதோ…

CINEMA

‘வாழ்க்கை எப்போதுமே ஒரு மாயவலை தான்’… வெற்றிமாறன்- அமீர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாயவலை’ படத்தின் மிரட்டும் டீசர் இதோ…

 

தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளைக் கொண்டவர் இயக்குனர் அமீர். இவர்  இயக்கம் மட்டுமின்றி  நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலும் கலக்கி வருகிறார். தற்பொழுது இயக்குனர் அமீர் ஹீரோவாக மாயவலை என்ற பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமீருடன் இணைந்து ஆர்யாவின் தம்பி சத்யாவும் மற்றொரு கதாநாயகனாக நடித்து வருகிறார்.

   

இந்த படத்தில் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கிறார்.  இவர்களுடன் வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும், JSM பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறார்.

இயக்குனர் ரமேஷ்கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் அமீரின் இந்த படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இயக்குனர் அமீர் -யுவன் சங்கர் ராஜா கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு இணைந்திருப்பதால் இத்திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள இப்படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் அமீர் தோன்றுகிறார். பின்னணி இசையும் இந்த டீசருக்கு பலம் சேர்த்துள்ளது. இதோ அந்த டீசர் வீடியோ…

Continue Reading
To Top