#image_title
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை2. இந்த படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். விஜய் சேதுபதி ஹீரோவாகவும் சூரி கதையின் நாயகனாகவும் நடித்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை சுமார் ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பிறகு இன்று திரைக்கு வந்திருக்கிறது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை இணையைவாசிகள் பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் விடுதலை2 வெற்றிமாறனின் கல்ட்டு கிளாசிக் படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றொரு பரிணாமத்தில் நாம் பார்க்கலாம். என்ன ஒரு நடிப்பு. இந்த படத்திற்காக வெற்றிமாறனுக்கு அடுத்து தேசிய விருது வரலாம். ஸ்பாய்லெஸ் வரும் முன்பு படத்தை பார்த்து விடுங்கள் சிறந்த அனுபவம் ஆக விடுதலை2 இருக்கும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அடுத்ததாக விடுதலை2 வெற்றிமாறனின் மாஸ்டர் பீஸ். துணிச்சல் மிகுந்த புரட்சிகரமான படத்தை ராவாக கொடுத்திருக்கிறார்கள். துல்லியமாக இயக்கியிருக்கிறார். இது சுதந்திரத்திற்கான மனிதர்களை ஒடுக்குமுறை மற்றும் எதிர்ப்புக்கு இடையிலான போராட்டத்தை பற்றி ஆழமாக ஆராயும் ஒரு படமாக இருக்கிறது. விடுதலை படத்தின் முதல் பாகம் எங்கு முடிந்ததோ அங்கே இருந்து படம் தொடங்குகிறது. நிகழ் கால காட்சிகள் ரசிகம்படியாக இருக்கிறது.
விஜய் சேதுபதி ஃபிளாஷ்பாக் காட்சிகளுக்குள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக உடைகிறது. கதை மிகவும் அழகாக செல்வது ஒரு கட்டத்தில் பின்னடைவாகிறது. அதையும் குறை சொல்ல முடியாதது. அடுத்ததாக முதல் 30 நிமிடங்கள் மிக பயங்கரமாக உள்ளது. விஜய் சேதுபதி இதில் மிளிர்கிறார். டயலாக்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் பக்காவாக இருக்கிறது. அதிக அளவில் புரட்சி உள்ளது. ஆனாலும் படம் சுவாரசியமாகவே செல்கிறது.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…