Categories: சினிமா

வட சென்னைதான் என்னோட பைபிள்.. அதுல இருந்துதான் என் மத்த படங்களுக்கு கண்டெண்ட் எடுப்பேன் –வெற்றிமாறன்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

வெற்றிமாறனின் கனவுப்படமாக அவர் பல ஆண்டுகளாக வடசென்னைப் படம் பற்றி கூறியிருந்தார். அதை மூன்று பாகங்களாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதன் முதல் பாகத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். மற்ற இரண்டு பாகங்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறியிருந்தார். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் அதற்கான முன்னெடுப்புகள் தெரியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பேசும்போது “வடசென்னை படத்தோட கதைதான் என்னோட பைபிள் மாதிரி. அதில் இருந்துதான் என்னுடைய மற்ற படங்களுக்கான கண்டெண்ட்டை எடுத்திருக்கிறேன். பொல்லாதவன் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் வடசென்னை கதாபாத்திரங்கள்.

#image_title

ஆடுகளம் படத்தில் வரும் குரு சிஷ்யன் உறவு வடசென்னை கதையில் உள்ளதுதான். அதேபோல விசாரணை படத்தில் வரும் என்கவுண்ட்டர் எல்லாம் வடசென்னை கதையில் உள்ளதுதான்” எனக் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு கதையை இன்னும் இரண்டு பாகங்கள் வெற்றிமாறன் எடுப்பாரா மாட்டாரா என்பது இப்போதுவரைக் கேள்விக்குறியாக உள்ளது.

vinoth

Recent Posts

பெங்களூருவில் அனல் பறக்கும் போராட்டம்…. களமிறங்கும் துருவ் ரதி மற்றும் பிரகாஷ் ராஜ்…. அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்….!

பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராகப் பிரபல யூடியூபர் துருவ் ரதி மற்றும் நடிகர் பிரகாஷ்…

3 minutes ago

கள்ளக்காதல் விவகாரம்… நடுரோட்டில் சீறிய துப்பாக்கி… பிரிந்து வாழ்ந்த மனைவி… கணவனின் வெறிச்செயல்… மார்க்கெட்டில் நடந்த கொடூரம்… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஃபிரோசாபாத்தின் டி.ஏ.வி மார்க்கெட் பகுதியில், திருமண முறிவு வழக்கு நிலுவையில் இருந்த சூழலில் தனித்து வாழ்ந்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட…

4 minutes ago

பதறவைக்கும் திருப்பம்…. காதலனைச் சந்திக்கச் சென்ற 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… காட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல்….!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், காதலனைச் சந்திக்கச் சென்று காணாமல்போன 17 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட…

12 minutes ago

நானா படேகருக்கு என்னதான் ஆச்சு?… அலறி அடித்து ஓடிவந்த நண்பர்… அசைவற்று கிடந்த உடல்… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

நள்ளிரவு கடந்த அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் உடல் உபாதை காரணமாக, நிலைமையை உணர்ந்து அவர் உடனடியாகத் தனது நண்பருக்குத்…

16 minutes ago

இனிமே ரிஜிஸ்டர் ஆபீஸில் அலையவே வேண்டாம்…. தமிழக அரசின் புதிய ‘வருகையில்லா பதிவு’ புரட்சி…. பட்டா, பத்திரப்பதிவில் அதிரடி திருப்பம்…!

தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவைகளை எளிமையாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட "வருகையில்லா ஆவணப்பதிவு" (Paperless / Non-visiting Document Registration) முறை தற்போது…

18 minutes ago