Categories: சினிமா

20 வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் ஃப்ளைட்ல ரஜினி சார் சொன்ன அந்த வார்த்தை… சூர்யா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Spread the love

தமிழ் சினிமாவுக்குள் எதிர்பாராத விபத்தாகவே சூர்யாவின் வருகை இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்த அவர் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகவே, அவருக்கு பதில் சூர்யா உள்ளே வந்தார்.

முதலில் சூர்யா நடிக்க, சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லையாம். அதே போல சூர்யாவுக்கும் நடிப்பில் ஆர்வம் இல்லையாம். கார்மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம். ஆனால் வசந்த இருவரையும் சமாதானப்படுத்தி சூர்யாவை நடிக்கவைத்துள்ளார்.

சரவணன் என்ற பெயரை மாற்றி சூர்யா என பெயர் வைத்து அவரை நடிகராக்கினார். அதன் பொன்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். முதலில் நடிப்பு, நடனம் எல்லாவற்றிலும் சூர்யா சுமார்தான். ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தன்னை மெருகேற்றிக் கொண்டு இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கிறார்.

#image_title

இப்போது அவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்துக்காக நாடு முழுவதும் சுற்றி சுற்றி ப்ரமோஷன் செய்து வருகிறார் சூர்யா. அப்போது அவர் ஒரு நேர்காணலில் கூறியுள்ள விஷயம் கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “நான் 20 ஆண்டுகளுக்கு  முன்பு ஒருமுறை ரஜினி சாரோடு ஃபிளைட்டில் செல்லும்போது “நீங்க வெறும் ஸ்டார் மட்டும் இல்லை, நல்ல நடிகன். அதனால் நல்ல கதைகளையும் தேர்வு செய்து நடியுங்கள்” என்றார். அதை நான் இப்போதும் மனதில் வைத்துள்ளேன். அதனால்தான் சிங்கம் போன்ற கமர்ஷியல் கதைகளிலும் நடிக்கிறேன். ஜெய்பீம் போன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

சூர்யா சமீபகாலமாக தியேட்டரில் வெளியாகி ஒரு சூப்பர் ஹிட் படத்தைக் கொடுக்க முடியாமல் தவிர்க்கிறார். அவரின் சமீபத்தைய ஹிட்ஸ்களான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய படங்கள் ஓடிடியில்தான் ரிலீஸாகி வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கங்குவா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

vinoth

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

1 மணத்தியாலம் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

1 மணத்தியாலம் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

4 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

4 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago