என்னப்பா இப்படி ஆயிடுச்சு.. பிடி கொடுக்காத வெற்றிமாறன்.. வாடிவாசல் விவகாரத்தில் சூர்யா எடுத்த திடீர் முடிவு..!

By Nanthini on ஆனி 7, 2025

Spread the love

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தை முடித்துவிட்டு ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து நடித்துவரும் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை முடித்த கையோடு வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க போவதாக ஒப்பந்தம் போடப்பட்டு சமீபத்தில் பழனிமலை முருகன் கோவிலுக்கும் இயக்குனருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். வெற்றிமாறன் இப்போதைக்கு வாடிவாசல் படத்தை ஆரம்பித்து விடலாமா என சூர்யா நேரடியாகவே கேள்வி கேட்க இன்னும் கொஞ்சம் டைம் வேண்டும் என்று படம் முடிக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகிறது என வெற்றிமாறன் கோரிக்கை வைக்க சூர்யா அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன்  வெளியிட்ட தகவல்

   

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் தொடங்கும் என அறிவிப்பு போஸ்டர் வெளியானது. பிறகு சில காரணங்களால் அப்படியே படம் எடுக்காமல் தள்ளி போய் நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா எப்போ படத்தை ஆரம்பிக்கலாம் என்று எப்போது முடிப்பீங்க என்று ஒரே பாகமாக படத்தை எடுத்து முடிப்பீங்களா என அடுத்தடுத்து கேள்விகளை வெற்றிமாறனிடம் எழுப்பியுள்ளார்.

   

kalaipuli thanu talks about vetrimaarans vaadivaasal movie update

 

ஆனால் இதற்கு வெற்றிமாறன் தரப்பிலிருந்து சரியான பதில் வராத நிலையில் சூர்யா வனங்கான் படத்திலிருந்து வெளியேறியது போல வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்கின்றனர். துருவ் விக்ரம் படத்தை முடித்து விட்ட மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷ் உடன் ஒரு படம் பண்ண போவதாக அறிவிப்பு போஸ்டர் வெளியானது. ஆனால் தனுஷ் இதேபோல பல படங்களை லைன் அப்பில் வைத்திருக்கிறார். நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி படத்தை முடித்துவிட்டு தாணுவிடம் வாங்கி அட்வான்ஸ் தொகையை சரி செய்ய மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.

வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா.. காரணம் இதுதான்! ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

அதனைப் போலவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 படத்தில் தற்போது தனுஷ் நடிக்க மாட்டார் என்றும் இந்தி படம் மற்றும் தமிழ் படங்கள் என முந்தைய லைனப்பை முடித்துவிட்ட பிறகு வருவார் என்பதால் சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் தாணுவுக்கு பண்ணி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சுத்தி வளைத்துப் பார்க்கும்போது வாடிவாசல் திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாகவே கூறுகின்றனர்.