விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆன சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. டிஆர்பி யில் அதிக புள்ளிகளை வாரம் தோறும் பெற்று வரும் இந்த சீரியல் சேனலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முத்து மற்றும் மீனா கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. இதில் முத்துவாக நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் மீனாவாக நடித்து வரும் கோமதி பிரியா இருவரும் இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணங்களாக உள்ளனர்.
வெற்றி வசந்திற்கு இது முதல் சீரியலாக இருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே வெற்றி வசந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தார். விஜய் டிவி சீரியலில் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவியை காதலிப்பதாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு க்யூட்டான ஒரு வீடியோவை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் இவர்களுக்கு மிக பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவில் சக சீரியல் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த் காதல் கதை பற்றி பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் Jiya பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நாள் எனக்கு போன் பண்ணி அக்கா எனக்கு நிச்சயதார்த்தம் பிக்ஸ் பண்ணிட்டாங்க நீங்க தான் மேக்கப் போடணும் என்று வைஷு என்கிட்ட சொன்னாங்க. நான் முதலில் நம்பவே இல்ல, அதன் பிறகு தேதி மற்றும் இடம் எல்லாம் சொன்ன பிறகு தான் நான் நம்பினேன். அவங்க ஆன் த ஸ்பாட்ல தான் எல்லாத்தையும் பார்த்தாங்க.
மேக்கப் திங்ஸ் மற்றும் ஜுவல்லரி என அனைத்தையுமே நான் தான் தேடி தேடி வாங்கினேன். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சமீபத்தில் தான் இவங்க காதல் கதையைப் பற்றி நானே கேட்டு தெரிந்து கொண்டேன். அதாவது முதலில் வெற்றி வசந்த் வைஷ்ணவிக்கு ப்ரொபோஸ் செய்துள்ளார். ஆனால் முதலில் வைஷ்ணவி வேண்டாம் என்று சொல்லியதால் வெற்றி பல நாட்கள் காத்திருந்தார். பிறகு ஒரு நாள் திடீரென வைஷ்ணவியை சந்தித்து கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டுள்ளார். உடனே அவரும் சரி என்று கூற வீட்டில் தங்கள் காதல் விஷயத்தை கூறி சம்மதம் வாங்கியதும் இரண்டு மாதங்களில் நிச்சயதார்த்ததை முடிவு செய்துள்ளனர். இதுதான் இவங்களுடைய காதல் கதை என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.