காதலியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடிய வெற்றி வசந்த்… வைரலாகும் வீடியோ..!!

By admin on ஐப்பசி 13, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. குடும்பத்தில் நடக்கும் சண்டைகள், அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்படுகிறது.

   

சிறகடிக்க ஆசை சீரியலில் வெற்றி வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். கோமதி ஹீரோயினாக நடிக்கிறார். சல்மா அருண், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியல் மூலம் கதாநாயகன் பிரபலமானார். சொல்ல போனால் சின்னத்திரையின் விஜய் சேதுபதி என அவரை ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

   

 

இவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் வெற்றி வசந்தம் விஜய் டிவியின் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவியும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நிச்சியம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றி வசந்த் வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ஆக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் வைஷ்ணவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.