“கனவினில் வந்த காதலியே”.. வைஷ்ணவியை கரம் பிடிக்கும் சிறகடிக்க ஆசை ஹீரோ வெற்றி வசந்த்.. வந்தாச்சு திருமண தேதி..!

By Nanthini on கார்த்திகை 23, 2024

Spread the love

விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆன சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. டிஆர்பி யில் அதிக புள்ளிகளை வாரம் தோறும் பெற்று வரும் இந்த சீரியல் சேனலில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முத்து மற்றும் மீனா கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. இதில் முத்துவாக நடித்து வரும் வெற்றி வசந்த் மற்றும் மீனாவாக நடித்து வரும் கோமதி பிரியா இருவரும் இந்த சீரியலின் வெற்றிக்கு முதல் காரணங்களாக உள்ளனர்.

Siragadikka Aasai: விரைவில் திருமணம்... இந்த வாரம் நிச்சயதார்த்தம்...  சின்னத்திரை காதல் ஜோடி சர்ப்ரைஸ்!

   

வெற்றி வசந்திற்கு இது முதல் சீரியலாக இருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே வெற்றி வசந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தார். விஜய் டிவி சீரியலில் பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவியை காதலிப்பதாக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு க்யூட்டான ஒரு வீடியோவை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருந்தார்.இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தான் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

   

சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்த் ❤️வைசு திருமணம்! பிரபல சீரியல் ❤️vetri vasanth  ❤️ Vaishu wedding - YouTube

 

இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவில் சக சீரியல் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த நிலையில் இவர்களின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி திருமணம் காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. தற்போது இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு தற்போது தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.