ஹீரோவை மக்கள் காதலிப்பதும், கொண்டாடுவதும் இயல்பு தான் ஆனால் ஒரு வில்லன் நடிகரை மக்கள் அனைவரும் விரும்பினார்கள் என்றால் அது நடிகர் ரகுவரன் தான். ஆறடி உயரம், கம்பீரமான குரல் என ஹீரோவின் அம்சம் பொருந்திய வில்லன் நடிகர் அவர்.

Actor Raghuvaran
1982ல் வெளிவந்த ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். குணச்சித்திரம், வில்லன் என பலவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்த ரகுவரனின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரகுவரன் மறைந்து விட்டாலும் அவர் நடித்த படங்களில் மூலம் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நாளில் அவர் குறித்த சில சுவாரசியமான தகவலை இப்போது பார்க்கலாம்.
மார்க் ஆண்டனி உருவான கதை

Raghuvaran and superstar rajinikanth in baasha
படத்திற்கு படம் வித்தியாசத்தை காட்டி அசத்திய ரகுவரன், பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனியாக நடித்து அனைவரையும் திகைக்க வைத்தார். பாட்ஷா படத்தில் ரகுவரன் நடித்தது குறித்து இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா என்ன சொல்கிறார் தெரியுமா? அந்த கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் முதல் டோலிவுட் வரை பல நடிகர்களை தேடி அலைந்த போது, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தவர் ரகுவரன் மட்டும் தான். ஏன்னா, பாட்ஷா பட வில்லனுக்கு உடல் பலம் தேவையில்லை, புத்தி கூர்மையான வில்லன் தான் தேவை, ஏன் என்றால் படத்தின் ஆணி வேறே மார்க் ஆண்டனி தான். இந்த கேரக்டருக்கு ரகுவரன் செட்டாவாருனு அவரை அணுகினோம் அவரும் ஒகே சொல்லிவிட்டார்.
ஆனால், எதிர்பார்த்ததை விட ரகுவரன் சிறப்பாக நடித்திருந்தார். ரகுவரனும் ரஜினியும் பேசும் வசனம் வரும் போது தியேட்டரில் கைத்தட்டல் அள்ளியது. படம் எடுக்கும் போது நான் என்ன நினைச்சு படத்தை எடுத்தேனோ அதைவிட அதிகமான வரவேற்பு படத்திற்கு கிடைத்தது. ரகுவரன் எப்போதுமே தனது பெஸ்டை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார், புத்திசாலியான நடிகரும் கூட, அதிகமா நடிக்காமலே உடல் மொழியால் அசத்திவிடுவார். ரகுவரனின் உடல் மட்டுமில்ல அவரின் குரலும் கூட நடிக்கும் என்று பாட்ஷா பட இயக்குநர் ரகுவரன் குறித்து பல பேட்டிகளில் பாராட்டி கூறியுள்ளார்.
பாபாவை எப்படி திட்டுவது ?

Throwback Rajinikanth and Raghuvaran
அதேபோல் நடிகர் ரஜினிக்கு ரகுவரன் என்றால் மிக இஷ்டமாம், பாபா படத்தில் இப்போ ராமசாமி கேரக்டரில் நடிக்க முதலில் ரகுவரனை தான் ரஜினி தேர்வு செய்தார், ஆனால் பாபா பக்தரான ரகுவரானோ பாபா பெயரை சொல்லி திட்டு கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஆஷிஸ் வித்யார்த்தி அசத்தி இருப்பார்.
ரகுவரன் மகன் தனுஷ்

Dhanush and Raghuvaran in Yaaradi nee mohini
ரகுவரனின் கடைசி திரைப்படம் யாரடி நீ மோகினி, அந்த படத்தில் தனுஷ் தந்தையாக ரகுவரன் வாழ்ந்து இருப்பார் என்று தான் சொல்ல வேண்டும். மக்களுக்கு அவர்களின் காட்ச்சிகள் பிடித்து போனது. இதுபற்றி தனுஷ் ஒரு பேட்டியில் கூறும்போது, படத்தில் நான் அவருக்கு மகனாக நடித்தேன் ஆனால் என்னை அவர் மகனாக தான் பார்த்தார். ஒருமுறை என்னிடம் யூ ஆர் மாய் சன் என கூறினார்.
அவர் இறந்தபோது அவர் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் நான் கிளம்பும்போது எண்னிடம் வந்து பாபா சிலையை கொடுத்து, ரகுவரன் இதை உங்களிடம் சேர்க்க சொன்னார் என்கிறார்கள். அவருக்கு என்மேல் அப்படி என்ன பிரியம் என தெரியவில்லை, ஆனால் என்னை மகனாக பார்த்த வரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என தனுஷே கூறி இருந்தார்.
அவர் வில்லனாக நடித்தாலும் மக்களின் ஹீரோவாக, மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.