கணவனை அடித்து கொன்று நீல நிற டிரம்மில் அடைத்த கொடூரம்…! முஸ்கான் மற்றும் சாஹிலுக்கான தீர்ப்பு இன்று… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் பரபரப்பு செய்தி…!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2026

Spread the love

கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது உடலை நீல நிற டிரம்முக்குள் அடைத்து மூடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன் சாஹில் ஆகியோருக்கு எதிரான தீர்ப்பு இன்று நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது. சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீதிபதி தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், நீதிமன்றத்தில் நீதிபதி எழுப்பிய கேள்விகளும், குற்றவாளிகளின் மௌனமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளிடம் இதற்கு முன்பு ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா மற்றும் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கேட்டபோது, முஸ்கான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார், சாஹில் இல்லை என்று மறுத்துள்ளார். கொடூரமான முறையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தச் கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.