Categories: சினிமா

அஜித்தை ஒரு மன்னிக்க முடியாத வில்லனாக நான்தான் காட்டினேன்… என் படங்களில் எந்த ஒற்றுமையும் இருக்காது –வெங்கட்பிரபு பெருமிதம்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர். அவர் இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்குனர் ஆவதற்கு முன்னர் அவர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பின்னர் உன்னை சரணடைந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் சென்னை 28 படத்தை இயக்கினார்.

venkat prabhu with vijay and ajith

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு  முன்னணி இயக்குனரான அவர் அடுத்து சூர்யா, கார்த்தி, சிம்பு மற்றும் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து படமியக்கினார். அவரின் சில படங்கள் வெற்றியும் சில படங்கள் தோல்வியும் அடைந்தன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் “நான் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது. ஆனால் எல்லா படத்துக்கும் இடையில் நகைச்சுவை ஒரு கனெக்டிங் பாய்ண்ட்டாக இருக்கும்.

Goa movie scene

முதல் முதலாக ஒரு நாள் இரவு திரில்லர் படத்தை (சரோஜா) நான்தான் இயக்கினேன். அதே போல ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய படத்தை (கோவா) நான்தான் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவில் இயக்கினேன். அதையடுத்து ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரான அஜித்தை ஒரு மன்னிக்க முடியாத வில்லனாகக் காட்டினேன். அடுத்து ஒரு ஆங்கில நாவல் போல பிரியாணி படத்தை உருவாக்கினேன். அதே போல முதல் டைம் லூப் படத்தை இயக்கினேன். அதன் பின்னர் இப்போது தளபதி விஜய்யை இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் கோட் படத்தில் காட்டியுள்ளேன்” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

21 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

26 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

26 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

31 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

32 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

34 minutes ago