#image_title
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. அவர் இயக்கத்தில் மட்டும் காமெடி நடிகர்கள் தங்களுடைய உச்சபட்சமான காமெடியை தொட்டிருப்பார்கள்.
அப்படி அவர் இயக்கிய படங்களில் நகைச்சுவையில் உச்சம் தொட்டது வின்னர் படத்தின் கைப்புள்ள காமெடி. அதுதான் வடிவேலுவும் சுந்தர் சியும் இணைந்து பணியாற்றிய முதல் படம். அந்த படத்தில் வடிவேலு கைப்புள்ளையாக அடித்த அலப்பறைக்கு வாய்விட்டு சிரிக்காத தமிழ் ரசிகர்களே இருக்க முடியாது. அதன் பின்னர் வடிவேலுவோடு இணைந்து பல படங்களில் பணியாற்றினார் சுந்தர் சி.
vadivelu as Kailpulla
ஊரில் எந்த வேலை வெட்டிக்கும் செல்லாமல் உதார் விட்டுக்கொண்டு ஓசி சோறு சாப்பிட்டுகொண்டு ஊர்நியாயம் பேசும் கைப்புள்ள. அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட ஒரு கூட்டம் என எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றும் கைப்புள்ள கதாநாயகன் சக்தி, வேதாச்சலம் தாத்தா மற்றும் வில்லன் கட்டதுரை ஆகியோரை மாட்டிக் கொண்டு லோல் பட்டு நொந்து நூலாகிறார்.
செல்லும் இடங்களில் எல்லாம் அடிவாங்கி அவமானப்பட்டாலும் தன்னுடைய கெத்தை விட்டுக்கொடுக்காமல் மெய்ண்டெய்ன் பண்ணி தன்னம்பிக்கையின் உச்சமாக விளங்குபவர்தான் கைப்புள்ள. இந்நிலையில் இன்றோடு இந்த படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கைப்புள்ள கதாபாத்திரத்தை நினைவுகூர்ந்து இந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
Vadivelu as Kailpulla
படத்தில் வடிவேலு பேசி இன்றளவும் சோஷியல் மீடியாவில் பயன்படுத்தப்படும் வசனங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…