கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக லியோ, லியோ என தொடர்ந்து லியோ பற்றிய பேச்சு தான் அதிக அளவில் இருந்து வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருக்கின்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா, சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். ஒரு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வந்தாலும் படம் பெரும்பாலான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. ஒரு வழியாக லியோ முடிவுக்கு வந்த நிலையில் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த பூஜைக்கு இயக்குனர் வெங்கடேஷ் பிரபு இசையமைப்பாளர் யுவனை வைத்து ஒரு மியூசிக் கம்போஸ் செய்திருக்கிறாராம். படத்தின் பூஜைக்கு வீடியோவா என்று பலரும் கூறி வருகிறார்கள்.
