Categories: சினிமா

என் முதல் படம் ‘பூஞ்சோலை’ வராதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்லதுதான்.. ஓப்பனாக பேசிய வெங்கட்பிரபு..

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர். அவர் இயக்கிய சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இப்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்குனர் ஆவதற்கு முன்னர் அவர் ஏப்ரல் மாதத்தில் மற்றும் சிவகாசி ஆகிய படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். பின்னர் உன்னை சரணடைந்தேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகுதான் அவர் சென்னை 28 படத்தை இயக்கினார்.

ஆனால் பலரும் அறியாத தகவல் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் 1996 ஆம் ஆண்டே வெங்கட் பிரபு தன்னுடைய தந்தை கங்கை அமரன் இயக்கத்தில் பூஞ்சோலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்தார். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்தது.

ஆனால் ஏதோ சில காரணங்களால் இந்த படம் ரிலீஸாகவில்லை. பொருளாதார பிரச்சனைகளில் சிக்கியதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்த படம் ரிலீஸாகி வெற்றி பெற்றிருந்தால் வெங்கட்பிரபு ஒரு முன்னணி நடிகராகக் கூட வந்திருக்கலாம்.  ஆனால் பூஞ்சோலை படம் காரணமாக அந்த படத்தின் தயாரிப்பாளரான கங்கை அமரன் கடுமையான பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதன் பின்னர் நடிப்பு வேண்டாம் என்றிருந்த வெங்கட்பிரபு கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார். பூஞ்சோலை படத்தைப் பற்றி ஒரு நேர்காணலில் பேசும்போது “அந்த படம் ரிலீஸ் ஆகாதது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்லதுதான்” என ஜாலியாகக் கடந்து சென்றுள்ளார்.

vinoth

Recent Posts

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

15 seconds ago

“என்னை போட்டுத் தள்ள பார்க்குறாங்க”… திமுகவை நாங்கதான் ஜெயிக்க வச்சோம்…. அமைச்சர் விஸ்வநாதனின் பகீர் வாக்குமூலம்…. கூட்டணிக்குள் விழுந்தது பேரிடி….!

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டப் பணிகளைத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரும்…

5 minutes ago

அக்கா… பெட்ரோல் போடுங்க… கவனத்தை திசைதிருப்பி போனை அபேஸ் செய்த திருடர்கள்… சிசிடிவி காட்சிகளால் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

NR புரா காவல்துறை, சிக்கமகளூரு மாவட்டம் முத்தினக்கொப்பா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக…

6 minutes ago

அடப்பாவமே… சாலையைக் கடந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இருசக்கர வாகனம் மோதி விபத்து… பதறவைக்கும் CCTV வீடியோ…!!

முண்டக்கயத்தைச் சுற்றியுள்ள வாரிக்காணி சந்திப்பில், சாலைக் பாதசாரி கடவையில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர…

12 minutes ago

CM விஜய் கொடுத்த அந்த சீக்ரெட் ஆர்டர்…. ஒரே இரவில் சிக்கிய 42 ரவுடிகள்…. தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட அலெர்ட்….!

தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், காவல்துறையினரும்…

15 minutes ago