விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு போட்டியாக சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கியது. இந்த நிலையில் விஜய் டிவியில் வேலை பார்த்த வெங்கடேஷ் பட் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். எளிமையான சமையல் முதல் கடினமான சமையல் வரை இவருக்கு அத்துப்படி.
குக் வித் கோமாளி நான்கு சீசன்களில் நடுவராக இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இப்போது சோஷியல் மீடியாவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றிய பேச்சு தான் அடிபடுகிறது. ஏனென்றால் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக வேலை பார்த்த மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.
இந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பிரியங்கா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தான் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாராம். இதனை அறிந்த ரசிகர்கள் மணிமேகலைக்கு ஆதரவாகவும் பிரியங்காவுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கடேஷ் பட் கூறியதாவது, அத பத்தி பேசுறது தப்பு இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு ஒரு நூறு பேர் கிளம்பி வந்து அவங்க அவங்க இஷ்டத்துக்கு வீடியோ போடுறாங்க.
பிரியங்காவும் மணிமேகலையும் என் வீட்ல ரெண்டு பேமிலி மெம்பர்ஸ் சண்டை போடுற மாதிரி தான் நான் பார்ப்பேன். அக்கா தங்கச்சி சண்டை மாதிரி தான். இதை பத்தி மத்தவங்க யாரும் பேசுவதற்கு உரிமையே இல்ல. சோசியல் மீடியா இப்ப ரொம்ப மோசமாயிடுச்சு. சென்சார் இல்லாமல் யார் வேணாலும் இஷ்டத்துக்கு பேசுறாங்க என கூறியுள்ளார்.