பேரழிவில் வெனிசுலா…. 10,000 பேர் உயிரிழப்பா?… உலகையே உலுக்கிய நள்ளிரவு அதிர்ச்சி… சுனாமி எச்சரிக்கை…!

By Nanthini on ஆனி 25, 2026

Spread the love

வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸ் பகுதியில், யாரும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை மாலை 6.04 மணியளவில், வெறும் 35 வினாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அன்று தேசிய விடுமுறை நாள் என்பதால், பொதுமக்கள் பலரும் மாலை நேரத்தில் வீடுகளுக்குள்ளேயே இருந்ததே இந்த அளவுக்குப் பாதிப்பு தீவிரமடைய முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த இயற்கை பேரிடரால் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில், இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் பீதியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளை அகற்றி, சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.