‘வீரம்’ படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது..? மளமளன்னு வளந்து ஹீரோயினி ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே… லேட்டஸ்ட்  கிளிக்ஸ்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்  வீரம். இதில் தமன்னா, பாலா, சமாதானம், நாசர் என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

   

வீரம் படத்தில் தமன்னாவின் குடும்பத்தில் ஒருவராக நடித்த சிறுமி தான் யுவினா. இவரை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது ஏவிஎம் நிறுவனம் தான்.

2011 வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ‘வீரம்’ படத்தில் தல அஜித்துடன் நடித்தார். இதில் கயல் என்ற பெயரில் குட்டி பெண்ணாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். ஆனால் இவரின் உண்மையான பெயர் யுவினா. 2008ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவருடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

யுவினாவின் அப்பாவின் ஆசையால் தான் இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.  முதன்முதலில் சின்னத்திரையில் கால் பதித்த இவர்,

வெள்ளித்திரையில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப் பை, மேகா, வீரம்  போன்ற பல படங்களில் நடித்தார். தற்பொழுது இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக  இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படங்களை  பார்த்த ரசிகர்கள் ” வீரம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது..? மளமளன்னு வளந்து ஹீரோயினி ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே” என்று கமெண்ட் செய்து  வருகின்றனர்.