Connect with us

ஒரே நாளில் வெளியாகி 10 வருடங்களை கடந்த வீரம் & ஜில்லா.. கலெக்‌ஷனில் வெற்றி பெற்ற படம் எது தெரியுமா?

CINEMA

ஒரே நாளில் வெளியாகி 10 வருடங்களை கடந்த வீரம் & ஜில்லா.. கலெக்‌ஷனில் வெற்றி பெற்ற படம் எது தெரியுமா?

 

ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் மோதிக் கொண்டால் எந்தளவு போட்டி இருக்குமோ? அப்படி தான் கடந்த 10 ஆண்டுகளாக அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ளும் போது ஏற்படும். அப்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் ஜில்லா படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் மோதியது. 2014-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி இந்தப் படங்கள் வெளியாகும் போது தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டது.

   

ரொமாண்டிக், காமெடி, செண்டிமெண்ட் கலந்த கதையாக வெளியானது அஜித்தின் வீரம் திரைப்படம். பெற்றோரை இழந்த அண்ணன் தனது நான்கு தம்பிகளையும் எப்படி வளர்த்து ஆளாக்குகிறார் என்பது குறித்தும், அவருக்கு திருமணம் செய்து வைக்க துடிக்கும் தம்பிகள் 4 பேரும், அவரை காதலில் விழ வைக்க, பிறகு இவரது அடிதடியை நேரில் கண்ட அந்தப் பெண் (தமன்னா) அஜித்தை விட்டு பிரிய, சண்டை சச்சரவுகளை விட்டு, அண்ணன் தம்பிகள் அனைவரும் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்துடன் ஐக்கியமாகின்றனர். பிறகு அந்த குடும்பத்திற்கு வரும் ஒரு பிரச்னையை எப்படி அஜித் சமாளிக்கிறார்? எப்படி காதலியை கரம் பிடிக்கிறார் என்பது தான் மீதிக் கதை.

#image_title

மறுபுறம், காதல், காமெடி, ஆக்‌ஷன் என விஜய்-மோகன்லால், பூர்ணிமா, என பலர் நடிப்பில் வெளியானது ஜில்லா திரைப்படம். ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்துவது போன்ற கதையை மையமாக வைத்து ‘ஜில்லா’வை உருவாக்கி இருந்தாா் இயக்குநர் நேசன். என்ன தான் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தாலும், இப்படம் விமர்சன ரீதியாக சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

#image_title

இரண்டு படங்களுமே ஓரளவு வெற்றி பெற்ற நிலையில், சில எதிர்மறையான கருத்துகளையும் பெற்றது எனலாம். இந்த போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை வைத்து தான் முடிவெடுக்க முடியும். அப்படி பார்கையில், விஜய்யின் ஜில்லா திரைப்படம் இந்தியா முழுவதிலும் 48 கோடியை வசூல் செய்தது. அஜித்தின் வீரம் திரைப்படம் இந்தியா முழுக்க 44 கோடியை வசூல் செய்தது. இந்த இரு படங்களும் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Archana
Continue Reading
To Top