தமிழக அரசியல் களம் தற்போது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், கட்சிக்குள்ளேயே ‘த.வெ.க ஆதரவு அணி’, ‘த.வெ.க எதிர்ப்பு அணி’ என இருவேறு துருவங்களாகத் தலைவர்கள் பிரியத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியா முழுவதும் தலித் தலைவர்களைத் தன்வசப்படுத்தி, அவர்களின் தனித்துவமான அரசியல் முகவரியைச் சிதைத்த பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அதே உத்தியைத் தமிழகத்தில் த.வெ.க அரசு மூலமாக விசிக மீது மறைமுகமாகப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளதா என்ற அச்சமும், எச்சரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
கடந்த கால இந்திய அரசியலை உற்று நோக்கினால், நாடு முழுவதும் இருந்த செல்வாக்குமிக்க தலித் தலைவர்களைப் பாஜக தந்திரமாகத் தன்வசப்படுத்தி பலவீனப்படுத்தியதை அறியலாம். தமிழகத்திலும் கூட, டாக்டர் கிருஷ்ணசாமி முதல் ஜான் பாண்டியன் வரையிலான தலைவர்கள் தங்களது தன்னாட்சி அடையாளத்தை ஓரளவுக்கு இழந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகையச் சூழலில், பாஜக-வின் சித்தாந்தத்தை எதிர்த்துச் சமரசமின்றி நின்ற ஒரே ஆளுமையான தொல். திருமாவளவனை, தற்போதைய த.வெ.க அரசின் கூட்டுக்குள் வைத்தே அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தப் பின்னணியில் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விசிக த.வெ.க அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தாலும், ஆளும் தரப்பில் உள்ள சில முக்கியப் புள்ளிகள் மூலமாக, “முன்பிருந்த திமுக அரசு தலித் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, த.வெ.க அரசுதான் அதிக அமைச்சர் பதவிகளை வழங்கியுள்ளது” என்ற பிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இந்த அதீத பிம்ப அரசியலின் மறுபுறம், திருமாவளவனின் தனித்துவமான இமேஜையும், கட்சியின் அடையாளத்தையும் சிதைக்கும் வேலைகள் தடையின்றி நடப்பதாகக் கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் த.வெ.க-வோடு தொடர்ந்து பயணிக்கும்படியானப் புற அழுத்தத்தை விசிக-விற்குப் பாஜக போன்ற சக்திகள் உருவாக்கியுள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த அரசியல் அழுத்தங்களின் நேரடி விளைவாக, த.வெ.க அரசின் கொள்கை முடிவுகளால் விசிக-விற்குள் இருவேறு அணிகள் உருவாகி, கட்சி கருத்தியல் ரீதியாகப் பிளவுபடத் தொடங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அண்மையில் த.வெ.க அரசு ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை ‘சமூக நீதித்துறை’ என மாற்றியதற்கு, விசிக பொதுச்செயலாளரும் எம்பியுமான ரவிக்குமார் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவரான அமைச்சர் வன்னி அரசு, விஜய் அரசின் முடிவை ஆதரித்துப் பேசியுள்ளார். அரசாங்கத்தில் இருந்துகொண்டே கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தத் தெளிவற்ற போக்கும் மோதலும், விசிக-வைப் பெரும் பிளவை நோக்கி நகர்த்தி வருகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவனை அரசியல் ரீதியாகக் காலி செய்வதன் மூலம், தமிழகத்தில் தலித் சமூகத்திற்கு என்று வலிமையானத் தலைமை தாங்கக்கூடியத் தனித்துவ ஆளுமைகள் யாரும் இருக்கக் கூடாது என்பதே இந்த நிழல் யுத்தத்தின் இறுதித் திட்டமாகச் சொல்லப்படுகிறது. இது ஒட்டுமொத்த தலித் மக்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாக முடியும். பல அரசியல் புயல்களைக் கடந்து, தமிழக அரசியலில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் தொல். திருமாவளவன். கட்சிக்குள் முளைத்துள்ள இந்த ஆதரவு – எதிர்ப்பு பிளவை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார், தலித் மக்களின் உரிமைகளைக் காக்க இந்தச் சதியை எப்படி முறியடிக்கப் போகிறார் என்பது இனி வரப்போகும் அவரது தீர்க்கமான அரசியல் நகர்வுகளில்தான் உள்ளது.
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…