காலையிலேயே பரபரப்பு… விஜயின் தவெகவுடன் இணையும் விசிக…. முடிவை அறிவித்தார்…..!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து எந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதே சமயம் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி தருவதால் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் திமுக மற்றும் அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் கட்சிகளுடன் செங்கோட்டையன் தொடர் ஈடுபட்டு வருகிறார் .

இந்நிலையில் விஜய் மக்கள் சக்தியோடு முதல்வராக வருவார் எனவும், அதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருமாவளவன் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். மேலும், தவெக கூட்டணியில் விசிக வருகிறதா என்பதை விட, விசிக தொண்டர்கள் அனைவரும் தவெகவிற்கு வருகிறார்கள் என்பதே உண்மை எனத் தெரிவித்தார்.