“விஜய்க்கு ஆதரவு இல்லை..?” விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் தவெக…!!

By Soundarya on வைகாசி 5, 2026

Spread the love

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தமிழக வெற்றிக் கழகம் அமைக்கவுள்ள புதிய அரசுக்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்குமா என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த தலைவர்கள், பெரும்பான்மை குறித்த கேள்விகளை சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்க வேண்டும் என்றும், நீங்கள் தவறான இடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்றும் கூறி மழுப்பினர்.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், விஜய் ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். இந்தச் சூழலில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளித்து புதிய அமைச்சரவையில் இடம் பெறக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

   

இருப்பினும், செய்தியாளர்கள் சந்திப்பில் சண்முகம் அளித்த விளக்கத்தின் மூலம் அத்தகையக் கூட்டணிக்கோ அல்லது அமைச்சரவையில் பங்கேற்பதற்கோ வாய்ப்பு இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தவெக ஆட்சியமைப்பதில் இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த தெளிவு கிடைத்துள்ளது. தவெக தலைவர் விஜய், நிர்வாக வசதிக்காகப் பனையூரிலிருந்து சென்னை நகருக்குள் தனது வசிப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.