படம் ரிலீஸ் ஆகி 7 மாசம் ஆச்சு… வாரிசு படத்தால் விஜய்க்கு எழுந்த புதிய சிக்கல்… காரணம் இவர்தானா?… பரபரப்பு புகார்..!!

By Nanthini on ஆவணி 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்த சரத்குமார் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

   

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் தான் கிடைத்தது. குறிப்பாக வாரிசு திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய லாபம் ஈட்டியதாக கூறப்பட்ட நிலையில் கேரளாவில் அந்த படத்தை விநியோகித்த ராய் என்பவர் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக புகார் அளித்திருந்தார்.

   

 

அந்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜவிடம் அவர் கேட்ட நிலையில் தில் ராஜு அதற்கு தர முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார். தற்போது அவர் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தற்போது லியோ படத்தின் வியாபாரம் சூடு பிடித்து இருக்கும் நிலையில் வாரிசு பட பிரச்சனை பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.