Connect with us

கொண்டாட்டம் ஆரம்பம்.. வெட்கத்தில் சிவந்த நடிகர் வரலட்சுமி முகம்.. வைரலாகும் மெஹந்தி கிளிக்ஸ்..!!

CINEMA

கொண்டாட்டம் ஆரம்பம்.. வெட்கத்தில் சிவந்த நடிகர் வரலட்சுமி முகம்.. வைரலாகும் மெஹந்தி கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். விக்னேஷ் சிவன் ஏகத்தில் சிம்பு போடா போடி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரலட்சுமி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக சங்கரின் பாய்ஸ், பாலாஜி சக்திவேலின் காதல் உள்ளிட்ட படங்களில் நடிக்க வரலட்சுமிக்கு சான்ஸ் கொடுக்கப்பட்டது.

ஆனால் தனது மகள் சினிமாவில் நடிக்க சரத்குமார் NO சொல்லிவிட்டாராம். இதனால் அந்த படங்களில் வரலட்சுமி நடிக்கவில்லை. போடா போடி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரலட்சுமி நடித்தார். ஹீரோயினாக இருந்தாலும் சரி வில்லியாக இருந்தாலும் சரி தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுவார் வரலட்சுமி.

   

 

அந்த வகையில் விஜய் நடித்த சர்க்கார், தனுஷ் நடித்த மாரி 2, விஷால் நடித்த சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் வரலட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சற்று குண்டாக இருந்த வரலட்சுமி ஹெவியாக வொர்க் செய்து ஸ்லிம்மாக மாறினார். அவரது எதார்த்தமான பேச்சுக்கும் மிரட்டலான நடிப்புக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமிக்கும் அவரது நீண்ட நாள் காதலரான நிக்கோலாய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அன்றிலிருந்து திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தது. தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி என திரையுலகையைச் சேர்ந்த ஏராளமானவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. நேற்று மாப்பிள்ளையை ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் வரவேற்று கட்டி அணைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இன்று மெஹந்தி போடும் பங்க்ஷன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title

author avatar
Priya Ram
Continue Reading
To Top