Connect with us

மிகப்பெரிய கோடீஸ்வரரை வளைத்து போட்ட வரலட்சுமி.. தடபுடலாக தாய்லாந்தில் திருமண ஏற்பாடு.. வாயைப் பிளக்கும் பிரபலங்கள்..!

CINEMA

மிகப்பெரிய கோடீஸ்வரரை வளைத்து போட்ட வரலட்சுமி.. தடபுடலாக தாய்லாந்தில் திருமண ஏற்பாடு.. வாயைப் பிளக்கும் பிரபலங்கள்..!

நடிகை வரலட்சுமியின் திருமணம் இன்று தாய்லாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.

நடிகர் சரத்குமாருக்கும் சாயாதேவி தம்பதிகளுக்கும் மகளாக பிறந்தவர்கள் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார். இவர் முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல், சண்டைக்கோழி 2, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் அசதி வருகின்றார்.

 

சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து அசத்தியிருந்த இவர் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வீரசிம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இவர் சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சச்சிதேவ் என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அவருக்கு தாய்லாந்தில் திருமணம் நடைபெற உள்ளது. இவரின் திருமண நாளை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக திருமண கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி இருந்தன. நடிகை வரலட்சுமி என் மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் மூத்த பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் இவர்களின் திருமணம் குறித்து பேசி இருக்கின்றார். மும்பையில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் நிகோலய் சச்தேவ். அவரது தந்தை அப்போதே மும்பையில் மிகப்பெரிய தொழிலதிபரை வளைத்து போட்டு இருக்கின்றார் வரலட்சுமி என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் சரத்குமார் நக்மாவால் இழந்ததை மகள் பிடித்து விட்டார் என்று கூறி இருக்கின்றார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top