“பாம்பை பார்த்தா பயப்படத்தான் செய்வாங்க”…. தமிழக அரசியலை அதிரவைத்த வன்னி அரசின் ஒற்றை வார்த்தை…. ‘பாம்பு’ உவமையால் பதறிய பாஜக…!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதற்கு திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் ‘இந்தியா’ கூட்டணியில் இணைய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “பாஜகவை பார்த்தும், பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்தும் அனைவருக்கும் பயம் வந்துவிட்டது. ஆனால் பிரதமர் மோடி யாருக்கும் எதிராக எந்த ஒரு தவறான நடவடிக்கையிலும் இறங்கவில்லை; உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்துள்ளார்” என்று பதிலளித்திருந்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்த ‘பயம்’ குறித்த கருத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “பாஜகவைப் பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறுகிறார், பொதுவாக பாம்புகளைப் பார்த்தால் எல்லாரும் பயப்படத்தான் செய்வார்கள்” என்று அவர் விமர்சித்துள்ளார். பாஜகவின் மக்கள் விரோத அரசியலையும் அதன் அச்சுறுத்தல் போக்கையும் சுட்டிக்காட்டும் விதமாகவே இந்த ‘பாம்பு’ உவமையை வன்னி அரசு கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

மேலும், அரசியலில் அதிமுகவும் திமுகவும் இணைந்து செயல்படலாம் என்று டி.டி.வி. தினகரன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வன்னி அரசு, “அதிமுக கரைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இரு கட்சிகளும் இணைவதற்கான இலக்கு என்ன என்பதுதான் முக்கியம். தவெக-வை எதிர்ப்பதற்காக இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைகின்றன என்றால் மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; அதைவிட மோசமான முன்னெடுப்பு எதுவும் இருக்க முடியாது. மாறாக, கோட்பாட்டு அடிப்படையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளை எதிர்ப்பதற்காக அவர்கள் ஒன்றிணைந்தால் அது சரியானதாக இருக்கும்” என்று தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.