Connect with us

என்னது.. ‘லியோ’ படத்துல வனிதாவின் மகனா…? யாராவது நோட் பண்ணுனீங்களா மக்களே..?

CINEMA

என்னது.. ‘லியோ’ படத்துல வனிதாவின் மகனா…? யாராவது நோட் பண்ணுனீங்களா மக்களே..?

 

தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக நேற்று முன்தினம் வெளிவந்த திரைப்படம் லியோ. இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது.  உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சாதனை படைத்து வருகிறது.  மேலும் இத்திரைப்படம் உலக அளவில் ஒரே நாளில் 148. 5 கோடி வசூல் செய்து வசூல் சாதனையும் படைத்துள்ளது.

   

லியோ படத்திற்கு அனிருத் இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.  தற்பொழுதே 1 வாரத்திற்கான படத்தின் ப்ரீ புக்கிங்கும் நடந்துவிட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா மகன் லியோ படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார்.

அதில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் என்று காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தான் நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகனான ஸ்ரீ ஹரி. தற்பொழுது இதுதொடர்பான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Continue Reading
To Top