TRENDING
சினிமாவில் ஹீரோயினியாக களமிறங்கும் வனிதாவின் 18 வயது மகள்… முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா..??
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகாந்தின் முதல் மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த மகள் தான் வனிதா. ஏற்கனவே இவர் விஜய் நடித்த சந்திரலேகா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் 90களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவரின் மூத்த மகள் ஜோவிகா சமீபத்தில் தன்னுடைய 18 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோயின் ரெடி என கூறி வந்தனர்.
இந்நிலையில் வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய மகள் சினிமாவில் நடிப்பது உறுதி, அதற்கான கதைகளை கேட்டு வரும் நிலையில் எந்த கதாநாயகனுடன் முதலில் நடிப்பது என்பதை விட ஹீரோயினிக்கு நல்ல கதாபாத்திரமும் கதைக்களமும் இருக்கின்றதா என்பதை தற்போது பார்த்து வருகின்றோம்.
விரைவில் என்னுடைய மகள் நடிக்கும் சினிமா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என வனிதா தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனது மகள் மும்பையில் உள்ள அனுபம் கேர் நடிப்பு பயிற்சி இன்ஸ்டிடியூட்டில் ஒரு வருடம் படித்துள்ளதாகவும் இந்த இன்ஸ்டிடியூட்டியில் தான் தீபிகா படுகோனே, வருந்தவன் உள்ளிட்ட பலரும் படித்ததாக மனிதா கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து திரையுலகில் இளம் கதாநாயகியாக அறிமுகமாகும் மனிதாவின் மகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.