கடந்த 2017ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் துவங்கியது. 6 ஆண்டுகள் நிறைவடைந்து, இப்போது 7வது ஆண்டில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சென்றுக்கொண்டு இருக்கிறது. வழக்கம்போல, நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் வீடு இந்த முறை 2 ஆக மாற்றப்பட்டு, இரண்டு குழுக்களாக பிக்பாஸ் போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். வழக்கம்போல இந்த முறையும் சண்டை சச்சரவுகள், பிரச்னைகள் என துவக்கத்தில் இருந்தே, நிகழ்ச்சி சூடுபிடித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். இந்த சீசனில் பிரதீப், விசித்ரா, ஐசு, நிக்ஸன், சரவணா விக்ரம், மாயா, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், பூர்ணிமா, ரவீனா தாஹா உள்ளிட்டோர் அடிக்கடி ஏதேனும் பிரச்னைகளை கிளப்பி, கண்டென்ட் உருவாக்குகின்றனர். எந்த பிரச்னை என்றாலும், அதில் நியாய தர்மங்களை பேசுவதில் வனிதா விஜயகுமாரை போலவே, அவரது மகள் ஜோவிகாவும் இருந்து வருகிறார். அதனால், தன் மகள் பங்கேற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, தினமும் இரவு ரிவ்யூ கொடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
வனிதா விஜயகுமார் அளித்த ரிவ்யூ நேர்காணலில், பிக்பாஸ் வீட்டுக்குள் நிக்ஸன், ஐசு நடந்துக்கொள்வது மிகவும் தவறாக உள்ளது. காதலர்களாக இருந்தாலும் பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளலாம். ஆண், பெண் நட்பை கொச்சைப்படுத்துவது போல அவர்களது செயல்பாடு உள்ளது. ஐசு, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துக்கொண்டு குடும்ப மானத்தை வாங்க வேண்டாம்.
சீக்கிரம் வெளியேறி வந்துவிட்டால், ரசிகர்கள் அதை மறந்துவிடுவார்கள். அந்தளவுக்கு ஐசு, பிக்பாஸ் வீட்டுக்குள் அசிங்கமாக நடந்து கொள்கிறார். நிக்ஸனை தேடிப்போய் அருகில் படுத்துக்கொள்கிறார். ஆனால், வெளியில் தனக்கு காதலர் இருப்பதாக கூறுகிறார். அவர் மிகவும் தப்பாக இருக்கிறார். இந்த டேமேஜ் உடன் அவர் வெளியே வந்துவிடுவதுதான் நல்லது. இதற்கு மேல் அசிங்கப்பட வேண்டாம் என்று கூறி இருக்கிறார் வனிதா விஜயகுமார்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…