#image_title
பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் அந்தாதூன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அதனை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தாதூன் படத்தில் பிரசாந்த் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார், ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை தளபதி விஜய் ரிலீஸ் செய்தார். நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, நான் ஸ்கூல் படிக்கும்போதே பிரசாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரசாந்த் எனக்கு கிரஷாக இருந்தார்.
அதன் பிறகு பிரபுதேவா எனக்கு ரொம்ப பிடிக்கும். பிரபுதேவா உடன் நடிக்க வேண்டும் என்றுதான் சினிமாவில் நடிப்பதற்கு ஓகே சொன்னேன். சந்திரலேகா திரைப்படத்தில் முதலில் பிரபுதேவா தான் நடிக்க வேண்டியது. அவருக்கு பதிலாக தான் விஜய் நடித்தார். அதன் பிறகு விஜய் எனக்கு கிரஷ் ஆக மாறிவிட்டார். அப்போதே விஜய் இடம் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகி விடுவீர்கள் என சொன்னேன். இப்போது விஜய் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். தியாகராஜன் சார் போல ஒரு அப்பாவை நான் பார்த்தது கிடையாது. அவர் பிரசாந்துக்கு பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார்.
அவர் என் மீதும் அதிகமான அன்பு வைத்துள்ளார். பல வருடங்களாக அவர்களது குடும்பமும் எங்கள் குடும்பமும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருமுறை நான் செல்போனை தொலைத்து விட்டு தவித்த போது தியாகராஜன் சார் எனக்கு சர்ப்ரைஸ் ஆக புதிய போன் வாங்கி கொடுத்தார். இப்போது தளபதி விஜய் அரசியலுக்கு செல்ல விருப்பதால் இனி அவரது இடத்தில் பிரசாந்த் வரவேண்டும் என நான் நினைக்கிறேன் என மேடையில் ஓபன் ஆக பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…