#image_title
வனிதா விஜயகுமாருக்கு, சர்ச்சை நாயகி என்றொரு பட்டப் பெயர் உண்டு. எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு பஞ்சாயத்தை இழுத்துவிடுபவர் என்று பலரும் விமர்சிக்கும் ஒரு நடிகையாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பிக்பாஸ் வீட்டுக்குள் பயங்கர அலப்பறை செய்தார். இந்தமுறை விஜய் டிவி சீசன் 7ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது மகள் ஜோவிகாவும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அவரால் நீண்ட நாட்களாக நீடிக்க முடியவில்லை. எனினும் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, ரிவ்யூ செய்துக்கொண்டே இருந்தார் வனிதா விஜயகுமார்.
இந்த சூழலில், நள்ளிரவில் ஒருவர் தாக்கிய காயத்துடன் புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் வனிதா விஜயகுமார் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, முதலில் நல்ல நிகழ்ச்சியாக மக்கள் விரும்பும் போட்டியாக இருந்தது. ஆனால் நாளடைவில் அதன் போக்கே வேறு மாதிரியாக போய்விட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் ஏதோ நம்பிக்கை இருக்கிறது.
இந்தமுறை பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா என்றால், அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் அவ்வளவு ஓட்டெல்லாம் வாங்கியிருக்க வாய்ப்பே இல்லை. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போடப்பட்ட அக்ரிமென்ட், சம்பளம் குறித்த விஷயங்கள் எல்லாம் லீக் ஆகியிருக்கிறது. அந்த ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. எனக்கும் பிக்பாஸ் குறித்த நிறைய முரண்பட்ட கருத்துகள், வின்னர் போட்டியாளர்களை தேர்வு செய்வது பற்றிய எதிர் கருத்துகள் இருக்கின்றன.
கடந்தமுறை ஒரு போட்டியாளராக இறுதி பினாலே நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இந்தமுறை என் மகளுக்காக பினாலே நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது. அர்ச்சனாவுக்கு டைட்டில் வின்னர் என்றால், என்னால் நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று ஆவேசமாக கூறியுள்ளார் வனிதா விஜயகுமார்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…