Categories: சினிமா

“என் பொண்ணுக்கு 18 வயசு ஆகுது, இதுக்கு கமல் பதில் சொல்லி ஆகணும், இல்லனா கோர்ட்டுல கேஸ் போடுவேன்”.. – ஆவேசப்பட்ட வனிதா..

Spread the love

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவரும் பல படங்களில் நடித்திருக்கிறார். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிதா, இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து கமல் வெளியேற்றிய சம்பவம், பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதுவும் பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு பிரதீப் தான் காரணம் என்ற வகையில், அவர் மீது குற்றம் சாட்டி வெளியேற்றியது கமல் மீதும் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து வனிதா விஜயகுமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,
பெண் பாதுகாப்பு என்றால் என்னவென்று கமல் சார் எனக்கு விளக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்று சட்டத்தில் பல விஷயங்கள் உள்ளது. சட்டம் எனக்கும் தெரியும். கமல்தான் இந்த பிரச்னையை ஆரம்பித்து வைத்தார். கமல்தான் இதை முடித்து வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் என் பொண்ணோட பேரை டேமேஜ் பண்றதை என்னால் ஏத்துக்க முடியாது.

என் பொண்ணுக்கு 18 வயது ஆகிறது. கமல் சார் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். என் பொண்ணு கேஸ் போடுவாள். இல்லை என்றால், பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்னையில், ஒரு பெற்றோரா நான் கேஸ் போடுவேன். என் பொண்ணோட கேரக்டர் எனக்கு நல்லா தெரியும். அவளை யாராவது விளையாட்டில் சீண்டினால், அதற்கு பதிலாக அவளுக்கான நேரம் வரும்போது கண்டிப்பாக செய்து விடுவாள். பிக்பாஸ் வீட்டுக்குள் வாராவாரம் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். மாயா, பூர்ணிமா எல்லோரது ஆட்டமும் ஒருநாள் மாறிப்போகும். சீக்கிரம் பூர்ணிமா வெளியே வந்துவிடுவாள், என்று கூறி இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

admin

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago