தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான். அதுமட்டுமல்லாமல் இவருடைய திருமண சர்ச்சைகளும் அதிகம் கிளம்பியதால் சோசியல் மீடியாவில் இவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். இவரைத் தொடர்ந்து தற்போது அவருடைய மகள் ஜோவிகா திரைத்துறையில் களமிறங்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக டீன்ஸ் படத்தில் பணியாற்றிய ஜோவிகா தற்போது அம்மா வனிதா விஜயகுமார் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தை புரொமோட் செய்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை வனிதா, இந்த படத்தில் தாலி காட்டும் சீனை கோவிலில் வைத்து சூட்டிங் செய்யும் போது ரொம்ப கஷ்டமா இருந்திச்சு.
தாலி கட்டுற சீன் மட்டும் 40 தடவை எடுத்தோம். இதை மாதிரி யாரும் பண்ணிடாதீங்க. முன்னாள் காதலருடன் நடிக்கிறது ரொம்ப வலி . நயன்தாரா, சிம்பு இரண்டு பேரும் பிரேக்அப் செய்து பிரிந்த பின், இருவரும் சேர்ந்து படத்தில் நடித்தார்கள். அவர்களுக்கு பிறகு ராபர்ட்டும் நானும் சேர்ந்து நடித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
