Connect with us

வித்தியாசமான காம்போவா இருக்கே.. மகளை ஹீரோயினாகும் இயக்குனர் பிரபு சாலமன்.. ஹீரோ இந்த பிரபல நடிகையின் மகனா..?

CINEMA

வித்தியாசமான காம்போவா இருக்கே.. மகளை ஹீரோயினாகும் இயக்குனர் பிரபு சாலமன்.. ஹீரோ இந்த பிரபல நடிகையின் மகனா..?

பிரபுசாலமன் மகள் புது திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க உள்ள நிலையில் எந்த நடிகருடன் நடிக்க இருக்கின்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் பிரபு சாலமன். தனது திரைப்படத்தில் பசுமை நிறைந்த காட்சிகளால் நம் மனதை குளிர வைக்கும் பிரபு சாலமன் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து சாட்டை, கும்கி, கயல், தொடரி உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கின்றார். இவர் இயக்கும் படங்களில் நடிகர் நடிகைகள் புது முகங்களாக இருந்தால் அப்படியே மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். இவரது மகள் ஹேசல் ஷைனி சமூக வலைதளம் மூலமாக பிரபலமானவர். தற்போது நடிகையாக புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

   

 

இந்த இயக்குனர் பிரபு சாலமன் தான் இயக்கப் போகிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் இவர் பிரபல நடிகை வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் பிறந்த விஜய் ஸ்ரீஹரி உடன் தான் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கின்றது. வனிதாவும் அவருடைய கணவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் தனது மகனை ஆகாஷ் தன்னுடன் வைத்து வளர்த்து வருகின்றார்.

தற்போது விஜய் ஸ்ரீஹரி அவருடைய தந்தையுடன் தான் வளர்ந்து வருகின்றார். சமீபத்தில் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதனை பிரபு சாலமன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தில் தான் பிரபு சாலமனின் மகள் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கிறார் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படம் கும்கி திரைப்படம் போன்று இருக்கும் என்று கூறப்படுகின்றது.

கும்கி படத்தில் யானை இருக்கும் இந்த திரைப்படத்தில் சிங்கம் இருக்கும் என்பதால் சிங்கத்திற்கும் விஜய் ஸ்ரீஹரிக்கும் இடையே சில பயிற்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முதல் படத்தில் நடிகை வனிதாவின் மகனும் இயக்குனர் பிரபு சாலமனின் மகளும் இணைய இருப்பது வித்தியாசமான காம்போவாக பார்க்கப்படுகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top