நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்..? இங்க வந்த பிறகுதான் இப்படி.. நடிகை வாணிபோஜனின் காரசார பேச்சு..

By admin on புரட்டாதி 25, 2023

Spread the love

நடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானார். அதிலும் இல்லத்தரசிகள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் வாணி போஜன். முதலில் சீரியல்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்த வாணி போஜன் தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக உள்ளார். சமீபத்தில் வாணி போஜன் ரொமான்டிக் திரில்லராக உருவான படத்தில் நடித்துள்ளார்.

   

இந்நிலையில் நடிகை வாணிபோஜன் நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் வாணி போஜன் அளித்த பேட்டியில் லிவிங் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது லிவிங் ரிலேஷன்ஷிப்பை மறுத்த வாணி போஜன் ஒரு நடிகருடன் நடித்து விட்டால் இது போன்ற விமர்சனங்கள் பரப்பப்படுகிறது.

   

 

Views and likes-க்காக இப்படியா பொய்யான தகவலை பரப்புவார்கள் என கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். நான் தொலைக்காட்சி தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கவில்லை. இப்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் இப்படி எல்லாம் வதந்திகளை பரப்புகிறார்கள்.

எனது சொந்த முயற்சியில் நான் முன்னேறி வருகிறேன். எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பேன். எனக்கு மற்றவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்று தான் அதிகமாக யோசிப்பேன். அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என காரசாரமாக பேசியுள்ளார்.