Connect with us

சரியான நேரம் பார்த்து வணங்கான் படத்தை களமிறக்கும் பாலா.. தியேட்டருக்கு புறப்பட ரெடியா இருங்கப்பா..!!

CINEMA

சரியான நேரம் பார்த்து வணங்கான் படத்தை களமிறக்கும் பாலா.. தியேட்டருக்கு புறப்பட ரெடியா இருங்கப்பா..!!

 

பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் பெரும்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வணங்கான் திரைப்படம் உருவானது. இந்த படத்தில் சூர்யா தான் முதலில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகிவிட்டார்.  அதன் பிறகு அருண் விஜய் வணங்கான் படத்தில் கமிட்டாகி நடித்தார். இந்தப் படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.

ஒரு கையில் பெரியார்.. மறுகையில் பிள்ளையார் - பாலாவின் 'வணங்கான்' ஃபர்ஸ்ட்  லுக் | bala vanangaan first look poster - hindutamil.in

   

இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். வணங்கான் திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயாதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  பிரபல இசையப்பாளரன ஜி.வி பிரகாஷ்  இசையமைக்கிறார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் ரிலீசான மிஷன் சாப்டர் 1  திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

வணங்கான் படத்தின் டீசர் வெளியானது.

அடுத்ததாக கிரிஷ் திருக்குமரன் இயக்கும் ரெட்ட தல என்ற படத்திலும் அருண் விஜய் நடித்து வருகிறார். சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் நாயகிகளாக நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இசையமைக்கும் ரெட்ட தல படத்தை பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார்.

Vanangaan: “எதிரும் புதிருமாக அருண் விஜய் - பாலா..” ட்ரெண்டாகும் வணங்கான்  ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ | Vanangaan: Arun Vijay and Director Bala photo  trending on the set of Vanangaan ...

வணங்கான் படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்தநிலையில் வருகிற ஜூலை மாதம் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கர்ஜிக்கும் அருண் விஜய் - பாலாவின் 'வணங்கான்' பட அப்டேட் | nakkheeran

author avatar
Priya Ram
Continue Reading
To Top