அது தான் MGR… எம்.ஜி.ஆர் செய்த செயலால் நெகிழ்ந்து போன கவிஞர் வாலி…!!

By Soundarya on கார்த்திகை 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும்.

#image_title

1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன். எம்ஜிஆர் எப்போதுமே தலைக்கனம் இல்லாதவர்.

   
   

 

அவர் வீட்டுக்கு வந்தவர்களை சாப்பிடாமல் அனுப்ப மாட்டார். எப்போதுமே அவருடை தோட்டத்தில் இருந்து பத்து பதினைந்து பேருக்கு சாப்பாடு வரும் . சத்யா ஸ்டூடியோ ஒட்டி எம்ஜிஆர் மேக்கப்  ரூம் இருக்கு. அங்கு ஒருநாள் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம்.  இலையை போட்டு பரிமாறும் நேரத்தில் நான் டக்குனு எழுந்து நின்றேன். அப்போது எங்கே போறீங்கன்னு எம்ஜிஆர் என் கையை பிடித்தார்.

பாவதர்னு ஒருத்தர் வந்திருக்காரு. அவரு வெளியே நிக்காரு. அவரை ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அனுப்பி வைத்து வந்து விடுகிறேன் னு சொன்னேன். நீங்க போகக்கூடாதுன்னு எம்ஜிஆர் என் கையை அமுக்கி பிடித்து அவரே கதவை திறந்து வெளியே வந்து வாலியுடன் வந்த பாகவதர் அப்படின்னு கூப்பிட்டு நீங்க தானா இங்கே வாங்கன்னு எம்ஜிஆர் அவரு கையை பிடிச்சிட்டு வந்து தான் பக்கத்தில் அவரை உட்கார வச்சி சாப்பாடு போட்டாரு அதுதான் எம்ஜிஆர் என்று கூறியுள்ளார்.